×

நத்தம் அருகே இரண்டாவது நாளாக சாலை மறியல்

நத்தம், ஏப்.22: சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, நத்தம் அருகே பொதுமக்கள் இரண்டாவது நாளாக மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திபட்டியில் நேற்று 2வது நாளாக மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வினோத், ஜஸ்டின்பிரபாகரன், நத்தம் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைதொடர்ந்து  அவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் 2 மணி நேரமாக நடந்ததையொட்டி நத்தம்-மதுரை சாலையில் வாகனங்கள் மற்றும் பஸ் போக்குவரத்து தடைபட்டது.

Tags : Natham ,road ,
× RELATED தனியார் அடுக்குமாடி குடியிருப்பில்...