×

நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் கஜமுகா சூரன் சம்ஹார உற்சவம் கோலாகலம்

காஞ்சிபுரம், ஏப்.22: காஞ்சிபுரம் அடுத்த உக்கம் பெரும்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயிலில் கஜமுகா சூரன் சம்ஹார உற்சவம் கோலாகலமாக நடந்தது. கஜமுகா சூரன் கர்வத்தில் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினான். தேவர்களும் முனிவர்களும் விநாயகரிடம் அசுரன் செய்யும் கொடுமைகளை முறையிட்டனர். இதையடுத்து விநாயகர், கஜமுகா சூரனுடன் போர் புரிந்தார். அப்போது, சூரன் மூஷிகமாக உருமாறி அஞ்சி ஓடி, இறுதியில் விநாயகரிடம் சரணடைந்தான். தவறை உணர்ந்த சூரனை, தனது மூஷிக வாகனமாக விநாயகர் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சிகாஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு கஜமுக சூரன் சம்ஹார உற்சவம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர் கஜமுக சூரனுடன் போர் புரியும் காட்சிகள் வாண வேடிக்கைளுடன் தத்ரூபமாக நடந்தன. விழாவில் நட்சத்திர விருட்ச விநாயகர், சேத்துப்பட்டு காமாட்சியம்மன் சமேத ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் மற்றும் மாங்கால் அருள்மிகு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் ஆகிய கிராம சுவாமிகள் எழுந்தருளினர். இவ்விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Gajamugha Surana Samhara Festival ,Vinayagar Temple ,
× RELATED சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 11,108...