மினி வேனில் கடத்தப்பட்ட ₹2 லட்சம் குட்கா பறிமுதல்: டிரைவருக்கு வலை

திருவொற்றியூர், ஏப்.22: திருவொற்றியூரில் மினி ேவனில் கடத்தி வரப்பட்ட ₹2 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிரைவரை தேடிவருகின்றனர். திருவொற்றியூர் பேசின் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலை ஓரத்தில் சந்தேகத்திற்கு இடமாக மினி வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. போலீசார், அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 9 முட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது தெரிந்ததுசுமார் 300 கிலோ எடை கொண்ட இதன் மதிப்பு ₹2 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, மினி வேனையும், அதிலிருந்த குட்காவையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். இந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் யார். இது எங்கே இருந்து கொண்டுவரப்பட்டது. இது எங்கே செல்கிறது என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேசின் சாலையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்கு அருகிலேயே மூட்டை மூட்டையாக குட்கா இருந்தால் இவை வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு விற்பனைக்காக   கொண்டுவரப்பட்டதா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

× RELATED வேன் டிரைவர் சுருண்டு விழுந்து சாவு