×

தளபதி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

திருத்தணி, ஏப்.22; தளபதி மெட்ரிக் மேனிலைப் பள்ளியில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில், மொத்தம், 107 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 550 மதிப்பெண்களுக்கு மேல், 6 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல், 20 பேரும், 480 மதிப்பெண்களுக்கு மேல், 81 பேரும் தேர்ச்சி பெற்றனர். இதையொட்டி பள்ளி தாளாளர் எஸ்.பாலாஜி. முதல்வர் சத்தியா, துணை முதல்வர் விநாயகம் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் , 100 சதவீதம் பள்ளி தேர்ச்சி பெறுவதற்காக பாடுபட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை பாராட்டி பரிசுகள் மற்றும் இனிப்பும் வழங்கப்பட்டது. இதேபோல். கெங்குசாமி மெட்ரிக் மேனிலைப் பள்ளியில், பிளஸ்2 தேர்வு எழுதிய, 104  மாணவர்களும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags : Commander ,Matriculation School ,
× RELATED விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா