×

வாலாஜா அருகே அம்மன் கோயிலில் உண்டியல் திருட்டு

வாலாஜா, ஏப்.22: வாலாஜா அடுத்த குடிமல்லூர் இறைவாத்தம்மன் கோயிலில் உண்டியம் மற்றும் பித்தளை குத்துவிளக்குகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாலாஜா அடுத்த குடிமல்லூர் ஏரிக்கரை அருகே இறைவாத்தம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் பூஜை முடித்து விட்டு பூசாரி வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் கோயிலுக்கு வந்த போது, கோயிலில் இருந்த உண்டியல் மற்றும் பித்தளை குத்துவிளக்கு திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, வாலாஜா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : theft ,temple ,Amman ,Valaja ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...