×

சித்திரை திருவிழா பவனி

உசிலம்பட்டி, ஏப். 21:  உசிலம்பட்டி அருகே, எழுமலையில் பெருமாள்பட்டி சாலையில் திருவேங்கடநாதப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழாவையொட்டி பெருமாள் பச்சப் பட்டு உடுத்தி சாட்டையுடன் ஆஞ்சநேயர் வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்தார். அப்போது, எழுமலை ஆத்தாங்கரைப்பட்டி சாலையில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி மயில் வாகனத்தில் முக்கிய வீதிகளில் பவனி வந்தார்.
பின்னர், பெருமாள், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி, 12 திருக்கண்கள் (மண்டகப்படி) உள்ள உசிலம்பட்டி சாலை, கிருஷ்ணன்கோவில் தெரு, தெற்குரதவீதி, எம்.கல்லுப்பட்டி சாலை, புல்லுக்கடை மைதானம் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் நேற்று பவனி வந்தனர்.

ஒவ்வொரு மண்டகப்படியிலும் பக்தர்கள் சுவாமிகளுக்கு அபிசேகம் செய்து வழிபட்டனர். பின்னர் ஆத்தாங்கரைப்பட்டி சாலை, நேதாஜி தெரு, திருமலைமன்னர் தெருவில் எதிர்சேவை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் கோயில்களுக்கு சுவாமிகள் சென்றனர்.  திருவிழாவில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை எழுமலை திருவேங்கடநாதப் பெருமாள் கோவில், மாதாந்திர சுப்பிரமணியசாமி, விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags : festival ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...