×

பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி தொடர்ந்து 10வது ஆண்டாக சாதனை

பட்டிவீரன்பட்டி, ஏப். 21: பட்டிவீரன்பட்டியில் உள்ள என்.எஸ்.வி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 10வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது. இப்பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 153 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 8 மாணவ, மாணவிகள் 500 மதிப்பெண்களுக்கு மேலும், 35 மாணவ, மாணவிகள் 400 மதிப்பெண்களுக்கு மேலும், 77 மாணவ, மாணவிகள் 400 மதிப்பெண்களுக்கு மேலும் எடுத்துள்ளனர். 108 மாணவ, மாணவிகள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற ராஜ என்ற மாணவிக்கு பரிசுகளை பள்ளிகளில் மேலாண்மை குழுத்தலைவர் ராஜாராம் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைவர் கருணாகரன், செயலாளர் பிரசன்னா, பெண்கள் பள்ளி செயலர் வெங்கடேசன் மற்றும் பள்ளி முதல்வர் ஆத்தியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : matriculation school ,
× RELATED விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா