×

பிளஸ் 2 தேர்வில் வள்ளியூர் கெய்ன்ஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

நெல்லை, ஏப். 21: பிளஸ் 2 தேர்வில் வள்ளியூர் கெய்ன்ஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. வள்ளியூர் கெய்ன்ஸ் மெட்ரிக் பள்ளியில்  பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் 73 பேரும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி ரெனிஷா கேரலின் 583 மதிப்பெண்களும், கத்தரின் சந்தியா ஜெர்ஷா 555 மதிப்பெண்களும், அபிஷா 554 மதிப்பெண்கள் பெற்றனர். கணினி அறிவியல் பாடத்தில் 5 மாணவர்கள் நூற்றுக்கு நூறு பெற்றனர். பள்ளி சராசரி மதிப்பெண் 449.  13 மாணவர்கள் 500மதிப்பெண் களுக்கு மேல் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர்கள் செல்வநாயகம், வசந்தா செல்வநாயகம், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டினர்.


Tags : Velliyur Gains Matriculation School ,
× RELATED மயங்கி விழுந்த கடை உரிமையாளரிடம் நகை பறிப்பு