×

கோவில்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து மாணவர் பலி திருச்செந்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை மழை

தூத்துக்குடி, ஏப்.21: தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக நேற்று பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. தமிழகத்தில் இந்தாண்டு வழக்கத்திற்கு முன்தாகவே கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாடவே அஞ்சுகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாநகர் உள்ளிட்ட சில இடங்களில் நேற்று அதிகாலை திடீரென பரவலாக மழை பெய்தது. சிறிது நேரம் மழை பெய்தாலும் சில இடங்களில் தண்ணீர் தெருக்களில் தேங்கி காணப்பட்டது. பகலிலும், வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டதால் வெப்பம் தனிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.கோவில்பட்டி: கோவில்பட்டி நகரில் கடந்த சில வாரமாக கடும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தினமும் காலை 7 மணிக்கு துவங்கும் வெயிலின் உக்கிரம் மாலை 6.30 மணி நீடித்தது.  நேற்றும் காலையில் வழக்கம்போல் கடும் கோடை வெயில் அடிக்க துவங்கியது.இந்த வெயில் மதியம் 1 மணி வரை நீடித்தது. இதன் பின்னர் வெயில் தணிந்து திடீரென வானில் மேக மூட்டங்கள் சூழ்ந்து மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது.  மதியம் 1.30 மணியளவில் லேசான சாரல் மழை பெய்தது.இதையடுத்து அடுத்த 10 நிமிடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கோடை மழை பெய்ய துவங்கியது. மழை தொடர்ந்து அரை மணி நேரம் மழை பெய்ததால் சாலை, தெருக்களில் மழைநீர் ஓடியது. இதனால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என பொதுமக்கள் வருணபகவானை வேண்டி வருகின்றனர். கழுகுமலை:  கழுகுமலை பகுதிகளில் கடந்த 2 மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பகலில் பலத்த வெயில் அடித்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே மேக மூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும், பலத்த காற்றும் வீசியது. மதியம் 2.30 மணிக்கு மேல் கழுகுமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள காலாங்கரைப்பட்டி, சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20 நிமிடம் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதிக வெப்பத்தில் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் இந்த மழையினால் மகிழ்ச்சியடைந்தனர். நாசரேத்: நாசரேத் மற்றும் சுற்றுபகுதிகளிலும் நேற்று சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது. இதன் காரணமாக நாசரேத் கோயில் தெருவில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. நாசரேத் 2வது ஐசக் தெரு, வியாபாரிகள் தெருவில் மழைநீர் தேங்கி கிடந்தது. திடீரென்று பெய்த மழையினால் நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : Kilivapitiya ,Tiruchendur ,
× RELATED திருச்செந்தூர் நகராட்சியில்...