×

சாத்தான்குளம் கோயிலில் வருஷாபிஷேகம்

சாத்தான்குளம், ஏப்.21:  சாத்தான்குளம் செல்வசுந்தர சித்திபுத்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.  விழாவையொட்டி கோயிலில் கணபதி ஹோமம், விக்னேஷ்வரபூஜை  உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து  கும்ப அலங்காரம், மகாபூர்ணாகுதி, கடம் எழுந்தருளல், தொடர்ந்து  செல்வசுந்தர சித்திபுத்தி விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு  பூஜைகள் நடந்தன. தொடர்ந்து  அலங்கார தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சிவராமகிருஷ்ணன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Sathankulam ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...