தச்சமொழி கோயிலில் சிறப்பு வழிபாடு

சாத்தான்குளம், ஏப். 21: தச்சமொழி முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சாத்தான்குளம் தச்சமொழி முத்துமாரியம்மன் கோயிலில் பவுர்ணர்மியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவையொட்டி  முத்துமாரியம்மன், முத்தாரம்மன், மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து  முத்தாரம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினார். பெண்கள் பக்தி பாடல்கள் பாடி  வழிப்பட்டனர்.  அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

× RELATED மழைபெய்ய வேண்டி மாரியம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வழிபாடு