×

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குள் யாரையும் அனுமதிக்க கூடாது

கள்ளக்குறிச்சி, ஏப். 21:    கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் கடந்த 18ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 6 சட்டமன்ற தொகுதியின் வாக்கு பெட்டி இயந்திரம் கள்ளக்குறிச்சி ஏகேடி பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள 6 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலர் அனுசுயாதேவி மேற்பார்வையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஏகேடி பொறியியல் கல்லூரி வளாகம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. மேலும் அக்கட்டிடம் முழுவதும் 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 52 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு குறித்து விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகள் ஆய்வு, வருகை பதிவேடுகளில் கையொப்பமிட்டு பாதுகாப்பு குறித்து கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதனிடம் கேட்டறிந்தார். அப்போது கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி தேர்தல் அலுவலர் அனுசுயாதேவி, இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர். பின்னர் எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், வாக்கு பெட்டி இயந்திரம் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள வளாகத்திற்கு உள்ளே யாரையும் அனுமதிக்கக்கூடாது என எச்சரித்தார். மேலும் அனுமதி பெற்று உள்ளே வருபவர்களை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டு உள்ளே அனுமதிக்க வே

Tags : area ,anyone ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...