×

இரு தரப்பினர் மோதல்: 32 பேர் மீது வழக்கு

விருத்தாசலம், ஏப். 21: பெண்ணாடம் அருகே சவுந்தரசோழபுரத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, வாக்குச்சாவடிக்குள் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு வந்த பெண்ணாடம் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் இரு தரப்பினரையும் அழைத்து விருத்தாசலம் ஏஎஸ்பி தீபா சத்தியன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி முன்னிலையில் ேநற்று முன்தினம் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல்  அவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது. போலீசார் தடுத்ததை மீறி இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். இதனால் பதற்றத்தை தணிக்க போலீசார் லேசான  தடியடி நடத்தி அனைவரையும் கலைத்தனர்.இதுகுறித்து சவுந்தரசோழபுரத்தை சேர்ந்த வீரமணி(37) என்பவர் கொடுத்த புகாரின் பேரில், அதே ஊரை சேர்ந்த வேல்முருகன்(23), கோபால்(52), முகேஷ்(25), வெற்றிவேல்(35) உள்ளிட்ட 14 பேர் மீது பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து, அதில் வேல்முருகன், கோபால், மதியழகன்,  முகேஷ், வெற்றிவேல், கார்த்திகேயன் ஆகியோரை கைது  செய்த னர். அதுபோல் வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து வீரமணி, ராஜேஷ், குமார், கண்ணதாசன், விக்னேஷ், வினோத் ரஞ்சித், மருதுபாண்டி ஆகியோரை கைது செய்தனர்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு