×

ஆலப்பட்டியில் 2 ஆண்டுகளாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் கிராம ஊராட்சி சேவை மையம்

கிருஷ்ணகிரி, ஏப்.21: தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும், ஒரு கிராம ஊராட்சி சேவை மையம் அமைக்கப்பட்டு, கிருஷ்ணகிரி ஒன்றியம், ஆலப்பட்டி ஊராட்சியில் கடந்த 2016-17ம் நிதியாண்டில் ₹17 லட்சம் மதிப்பில் கிராம ஊராட்சி சேவை மையம் கட்டப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும் கட்டிடம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெறுவதற்கு கிருஷ்ணகிரிக்கு செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது. இதனால், எந்த நோக்கத்திற்காக இந்த சேவை மையம் கட்டப்பட்டதோ, அது நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. ஒவ்வொரு சான்றிதழ்  பெறவும், 2 நாட்கள் வேலைக்கு செல்ல முடிவதில்லை. இதனால், பொதுமக்களுக்கு தேவையற்ற காலவிரயம், பொருளாதார இழப்பு போன்றவை ஏற்படுகிறது. தற்போது பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதனால், கல்லூரியில் சேர தேவையான சான்றிதழ்கள் பெற வேண்டியுள்ளது. எனவே, உடனடியாக மாவட்டத்தில் திறக்கப்படாமல் உள்ள இதுபோன்ற சேவை மைய கட்டிடங்களை திறக்க, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : opening ceremony ,Village Panchayat Service Center ,Alappatti ,
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கிளை திறப்பு விழா