×

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு எட்டுக்குடி முருகன் கோயிலில் பால்காவடி எடுத்து நேர்த்திகடன் பக்தர்கள் திரண்டனர்

கீழ்வேளூர், ஏப்.21: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு எட்டுக்குடி முருகன் கோயிலில் பால்காவடி எடுத்து திரளான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடி சுப்பரமணிய சுவாமி கோயில் சித்திராபவுர்ணமி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா  மற்றும் பால் காவடி  நிகழ்ச்சி  நடைபெற்றது. வானமீகி சித்தர் ஜுவசமாதி அடைந்த இடமும், குழந்தைகள் பயந்த சுபாவம் நீங்கவும், திருமணத்தடை குழந்தைப்பேறு பெறவும், பாவம் போக கோயில் குளமான சரவணப் பொய்கையில் குளித்தால் பாவம் தீரும் என்ற புகழ் பெற்ற  சுப்பரமணிய சுவாமி கோயில் சித்ரா பவுர்ணமி விழா கடந்த 5ம் தேதி கொக்கரித்த விநாயகர் நிறைபணியுடன் தொடங்கியது.  அதை தொடர்ந்து 10ம் தேதி  கொடி ஏற்றம் நடைபெற்றது.

தினம் தோறும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனத்தில் சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்று வருகிறது. முக்கிய திருவிழாவான தேர் திருவிழா கடந்த 18ம் தேதி நடைபெற்றது. நேற்று முந்தினம் இரவு காவடி ஆட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.  முருகனுக்கு 18ம் தேதி அதிகாலை முதல் 20ம் தேதி காலை வரை தொடர்ந்து 3 நாட்கள் இடைவிடாமல் பக்தர்கள் சித்ரா பவுர்ணமி   பால் காவடி எடுத்து கொண்டு வந்து சுவாமிக்கு செலுத்திய பால் அபிஷேகம் நடைபெற்றது. நேற்று கொடி இறக்கப்பட்டு  வரும் 23ம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தங்கராஜி, கோயில் நிர்வாகிகள், கிராமவாசிகள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Tags : pilgrims ,temple ,Chitra Poornima ,Ettukudi Murugan Temple ,
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...