×

கேத்தி பாலாடா பகுதியில் குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு

குன்னூர், ஏப்.19: கேத்தி பாலாடா பகுதியில் முறையான குடிநீர் வசதியின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.  குன்னூர் அருகேயுள்ள கேத்தி பாலாடா பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.  இப்பகுதியில் வசிக்ககூடிய மக்கள் பெறும்பாலும் கூலி வேலை செய்பவர்கள். இந்நிலையில், கேத்தி பாலாடா பகுதியில் முறையாக குடிநீர் வநியோகம் செய்யப்படாததால் அடிப்படை தேவைக்கு கூட தண்ணீர் இன்றி  பொது மக்கள் தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மக்கள் தங்கள் குடிநீர் தேவைக்காக நீண்ட தூரம் நடக்கவேண்டியுள்ளது. மேலும் அப்பகுதியில் குடிநீர் கிணறு இருந்தும் குழாய்கள் அமைக்கப்படாததால்  முறையாக குடிநீர் கிடைப்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு முறையான குடிநீர் குழாய்களை அமைத்துதரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : area ,Kati Balia ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...