×

சுற்றுலா பயணிகளை கவரும் எவர்லாஸ்ட் மலர்கள்

ஊட்டி, ஏப். 19: ஊட்டி அருேகயுள்ள முத்தோரை பாலாடா பகுதிகளில் சாலையோரங்களில் அதிகளவு பூத்துள்ள எவர்லாஸ்ட் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.  நீலகிரி மாவட்டித்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், தற்போது வெளியூர்கள் மற்றும் வௌி மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதற்காக பூங்காக்கள் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான பூங்காக்களில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்வது மட்டுமின்றி, இயற்கை எழில் கொஞ்சும் அவலாஞ்சி, சூட்டிங்மட்டம், பைக்காரா மற்றும் ெதாட்டபெட்டா போன்ற பகுதிகளுக்கும் செல்கின்றனர். ஊட்டியில் இருந்து அவலாஞ்சி ெசல்லும் சாலையில் முத்தோரை பாலாடா பகுதிகளில் மஞ்சள் நிறத்தில் சாலையோரங்களில் எவர்லாஸ்ட் மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்வது மட்டுமின்றி, அதன் அருகே புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.



Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்