அமமுக அலுவலகத்தில் அதிமுகவினர் எப்படி பணம் வைப்பார்கள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி

சிவகாசி, ஏப். 19: ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் அதிமுகவினர் எப்படி பணம்  வைப்பார்கள் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார். சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்  வாக்குச்சாவடி எண் 106ல் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, சாத்தூர் தொகுதிக்குட்பட அனைத்து இடைத் தேர்தல்களிலும் அதிமுக வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெறுவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் பணப்புழக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுவது பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். தேர்தலுக்காக மக்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆண்டிபட்டியில் அலுவலகத்தில் கைப்பற்றிய பணம் தங்களுடையது அல்ல என்று தங்கதமிழ்செல்வன் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. தினகரன் நாட்டை கொள்ளையடிப்பதற்காகவே கூட்டத்தை கூட்டியுள்ளார். சாத்தூர் அமமுக வேட்பாளர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 43 லட்சத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது. கொள்ளையடிக்கவே தினகரன் ஆட்சிக்கு வர துடிக்கிறார். மீண்டும் மோடி பிரதமராக வருவார் என்று தெரிவித்தார்.

Related Stories: