×

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ஆண்டிபட்டி,ஏப்.19: சித்திரை  மாத பிரதோஷத்தை முன்னிட்டு ஆண்டிபட்டி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ஆண்டிபட்டியைச் சுற்றி கண்டமனூர், ராஜதானி, கொப்பையம்பட்டி, அரப்படித்தேவன்பட்டி, டி.சுப்புலாபுரம், ஆண்டிபட்டி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் சித்திரை மாத பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. முதலில் நந்தி தேவருக்கு  அரிசி மாவு, திருமஞ்சனம், மஞ்சள், தயிர், பால், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 24 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர், இதே போன்று சிவபெருமானுக்கும் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Tags : Prado ,temples ,Shiva ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு