×

கம்பத்தில் பீப் சத்தத்தை காணோம்

கம்பம், ஏப்.19: கம்பம் வாக்குச்சாவடியில் பீப் சப்தம் வரவில்லை எனக்கூறி வாக்காளர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் தேர்தல் நிறுத்தப்பட்டு, வேறு மெஷினில் மீண்டும் தேர்தல் நடந்தது.கம்பம் நகரில் நேற்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுப்பாக நடந்தது. கொளுத்தும் வெயிலிலும் மக்கள் நீண்ட க்யூவில் நின்று வாக்குகளை அளித்தனர். இந்நிலையில் இங்குள்ள முக்தி விநாயகர் கோட்டை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அப்போது மெஷின் ஒன்றில் ஓட்டுப்போட்ட பின்பு பீப் சப்தம் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வாக்காளர்கள் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டனர். தேர்தல் முகவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து தேர்தல் அதிகாரி சம்பந்தப்பட்ட மண்டல தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார். வேறு மெஷின் கொண்டு வரப்பட்டது. இதனால் சுமார் ஒன்றரை மணிநேரம் வாக்குபதிவு நிறுத்தப்பட்டது.


Tags :
× RELATED உடல் தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு