×

அனல் மின் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்திய 13 கிராமத்தில் வாக்குப்பதிவு குறைவு

ஜெயங்கொண்டம், ஏப். 19: ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட கிராமங்களான துளாரங்குறிச்சி, புதுக்குடி, மேலூர், தேவனூர், மருக்காலங்குறிச்சி, தண்டலை, குளத்தூர், உள்ளிட்ட 13 கிராமங்களில் விவசாயிகள் தங்களது நிலங்களை கையகப்படுத்தி 23 ஆண்டுகளுக்கு பின்னும் திட்டங்களை செயல்படுத்தாததால் தங்களது நிலங்களை திருப்பி கேட்டு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் மக்களவை தேர்தலை புறக்கணிப்போம் என்று மக்கள் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பால் விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியடைந்தது.

இந்நிலையில் நேற்று தேர்தல் நடந்தது. தேர்தலின்போது இந்த 13 கிராமங்களில் வாக்குப்பதிவு காலையிலிருந்து மிக மந்தமாக இருந்தது. குறைந்த அளவே வாக்குகள் பதிவாகி இருந்தன. தண்டலை கிராமத்தில் 927 வாக்காளர்கள் இருக்கும் ஒரு மையத்தில் மாலை 6 மணி வரை 43 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர் மற்றொரு மையத்தில் 970 வாக்களர்களுக்கு 467 பேர் வாக்களித்திருந்தனர். இதுபோல் மேலூரில் குறைவாகவே வாக்குப்பதிவு ஆகியிருந்தன. அனல் மின் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்திய 13 கிராமங்களில் வாக்குப்பதிவு மிகவும் குறைவாகவே இருந்தது.

Tags : villages ,land ,
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை