×

குவைத்திலிருந்து ரூ.30 ஆயிரம் செலவு செய்து சொந்த ஊருக்கு வந்து வாக்குப்பதிவு செய்த 2 இளைஞர்களுக்கு பாராட்டு

பெரம்பலூர், ஏப். 19: ரூ.30 ஆயிரம் செலவு செய்து 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் கடந்து வந்து சொந்த ஊரில் வாக்களித்த விசுவக்குடியை சேர்ந்த இரு இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி கிராமம் உள்ளது. பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் நடந்ததைெயாட்டி விசுவக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்துது. இந்த விசுவக்குடியை சேர்ந்த அப்துல் ஹக்கிம் என்பவரது மகனான மகன் அபுபக்கர் சித்திக் (29) என்ற பொறியியல் பட்டதாரி, குவைத் நாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அதேபோல் இதே ஊரை சேர்ந்த முகமது அலி மகனான முகமது நூருல்லா (31) என்பவரும் குவைத் நாட்டில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று விசுவக்குடி கிராமத்தில் வாக்காளர்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் இருவரும் தனது சொந்த செலவில் தலா ரூ.30 ஆயிரத்தை செலவு செய்து 2,000 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வந்து தங்கள் வாக்குகளை வரிசையில் நின்று காத்திருந்து மகிழ்ச்சியுடன் வாக்களித்தனர். வாக்களிப்பதற்காக டிராவலிங் விசாவில்  இந்தியா வந்த இவர்கள், இன்னும் நான்கு நாட்களில் மீண்டும் குவைத் செல்ல உள்ளனர். இவர்களின் இந்த செயலை உறவினர்கள் மட்டுமில்லாமல் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.

Tags : Kuwait ,hometown ,
× RELATED சென்னையில் இருந்து துபாய், குவைத்,...