×

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு தோல்வியை கண்டு மாணவர்கள் துவண்டு விட கூடாது உளவியல் ஆலோசகர் அறிவுரை

மன்னார்குடி, ஏப். 19: தேர்வில் தோற்றவர்கள் எல்லாம் வாழ்க்கையில் தோற்றவர்கள் அல்ல. தோல்வியை கண்டு மாணவர்கள் துவண்டு விடாமல் தன்னம்பிக்கையுடன் போராடி வெல்ல வேண்டும் என உளவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார். இது குறித்து உளவியல் ஆலோசகர், தேசிய அளவிலான தன்னம்பிக்கை பயிற்சியாளர் பொறியாளர் சம்பத் மன்னார்குடியில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எல்லா மாணவர்களும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் கடுமையாக உழைத்து தேர்வு எழுதினார்கள். பலர் அதில் சிறப்பாக வெற்றியினை பெற்றிருப்பார்கள். அவர்கள் மகிழ்வது இயல்பு. மற்ற  சிலர் தேர்வில் தோல்வியோ அல்லது குறைவான மதிப்பெண்களையோ பெற்றிருக்க கூடும். இந்த முடிவால் மாணவர்கள் மாணவர்கள் சற்றும் மனம் தளரக் கூடாது.

மன தைரியமும் தன்னம்பிக்கையும் இந்த நேரத்தில் மிகவும் அவசியம் ஆகும். தேர்வில் தோற்றவர்கள் எல்லாம் வாழ்க்கையில் தோற்றவர்கள் அல்ல.  தொடர் முயற்சியாலும் கூடுதல் உழைப்பாலும் அவர்கள் அடைய நினைத்த உயரத்தை வெற்றியை மீண்டும் பெற்றவர்கள். பலர் நம் கண்முன்னே உள்ளனர். எனவே தோல்வியை கண்டு துவண்டு தற்கொலை போன்ற தவறான முடிவுகளை ஒரு போதும் எடுக்கக்கூடாது . மாறாத இந்த அவமானத்தை தன்மானமாக மாற்ற கடுமையாக உழைத்தால், அடுத்து மிகச் சிறப்பான வெற்றியினை பெற முடியும். இந்த சமயத்தில் பெற்றோர்கள் மாணவர்களை திட்டுவதால் எந்த பலனும் இல்லை. நடந்தது நடந்து முடிந்து விட்டது.

இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதனை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.கடும் மன அழுத்தத்தில் உள்ள மாணவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும், தங்கள் பெற்றோர் துணை தனக்கு இருக்கிறது என்கிற எண்ணத்தை மாணவனுக்கு ஊட்ட வேண்டும் .ஏனெனில் அவன் மாணவனாக வெற்றி பெறுவதை விட உங்கள் குழந்தையாக வாழ்வில் வெற்றி பெற வேண்டும். சூழலிலும் எதிர்மறையாக எதனையும் பேசக்கூடாது.இதுவே இப்போது நாம் செய்யும் சிறப்பான கடமையாகும்.

Tags : Psychology consultant ,examination ,Plus 2 ,
× RELATED நீட் தேர்வு : மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரை