×

காரிமங்கலம் அருகே கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் நகை பறிப்பு

தர்மபுரி, ஏப்.19:  காரிமங்கலம் அருகே நடந்த கும்பாபிஷேக விழாவில், 3 பெண்களிடம் 10 பவுன் நகை பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். காரிமங்கலம் அடுத்த பேகாரஅள்ளி நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில், நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த விழாவில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பேகாரஅள்ளி அடுத்த சுண்ணாம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி ரேவதி(25) என்பவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த ரேவதி, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காரிமங்கலம் போலீசாரிடம் புகார் செய்தார். இதே போல், சந்திரா(30) என்ற பெண்ணிடம் 5 பவுனும், சுமதி(35) என்பவரிடம் இரண்டை பவுன் என மொத்தம் 3 பேரிடம் பத்தரை பவுன் நகை பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகார்களின் பேரில், காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kumbabishekha ,festival ,Calimangalam ,
× RELATED பெண்ணிடம் நகை பறிப்பு