×

மழை வேண்டி சிறப்பு பூஜை

தர்மபுரி, ஏப்.19: தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே, சித்தலிங்கேஸ்வரர் கோயிலில் நேற்று சித்திரை மாத பவுர்ணமி பூஜை நடந்தது. இதில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு பூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு விநாயகர் பூஜை, தம்பதி சங்கல்பம், கலசஸ்தாபனம் நடந்தது. இதை தொடர்ந்து மழை வேண்டி, வருணபகவானுக்கு ஹோமம் நடந்தது. மேலும், ஆயுஸ்ய ஹோமம், மங்களபார்வதி ஹோமம், சத்ரு நிவர்த்தி பரிஹார ஹோமம் ஆகியவை நடந்தன. இரவு மகாதீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ரம்ஜான் பண்டிகை நாளில்...