×

குமாரபுரத்தில் இன்று சுடலைமாட சுவாமி கோயில் சித்திரை பெருங்கொடை விழா

நெல்லை, ஏப். 19:  குமாரபுரம் பத்மநாப சுடலைமாட சுவாமி கோயில் சித்திரை பெருங்கொடை விழா இன்று நடக்கிறது. திசையன்விளை அருகே உள்ள குமாரபுரம் ஆலடி, பத்மநாப சுடலைமாட சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருங்கொடை விழா விமரிசையாக நடைபெறும்.  இந்த ஆண்டுக்கான சித்திரை பெருங்கொடை விழா நேற்று இரவு துவங்கியது. இரவு மாக்காப்பு அலங்கார பூஜை, குடிஅழைப்பு, தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து கொடை விழாவான இன்று (வெள்ளி) காலை 10 மணிக்கு பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு கும்பாபிஷேகம், 1 மணிக்கு அலங்கார திருக்கரத் தீபாராதனை, சுவாமி மஞ்சள் நீராடல் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 12 மணிக்கு மேல் புஷ்ப அலங்கார தீபாராதனை, சுவாமி மயான  வேட்டை நடைபெறு கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சுடலைமுத்து பிள்ளை மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Swamy Temple Chaiti Perumangoda Festival ,
× RELATED முன்விரோதத்தில் தாக்கிய வாலிபர் கைது