×

கடையம் கோயிலில் சித்திரை தேர் திருவிழா கோலாகலம்

கடையம், ஏப். 19:   கடையம் நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வவனநாத சுவாமி கோயிலில், கடந்த 10ம் தேதி சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாள் வீதியுலாவும், 16ம் தேதி நடராஜருக்கு சிவப்பு சாத்தி, 17ம் தேதி வெள்ளை சாத்தி நடந்தது.நேற்று காலை சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளலையடுத்து 7.40 மணியளவில் சுவாமி தேரும், தொடர்ந்து அம்பாள் தேரும் இழுக்கப்பட்டது. இன்று (19ம் தேதி) காலை 9 மணிக்கு சித்ரா பவுர்ணமி மண்டகப்படிக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளலும், 11 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேவி, ஆய்வாளர் முருகன், தக்கார் சீதாலட்சுமி மற்றும் விழாக் கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோல் பாப்பான்குளம் ராமசாமி கோயிலிலும் சித்திரை தேர் திருவிழா நடந்தது. தேரில் ராமர், சீதை, லட்சுமணன் எழுந்தருளியதை தொடர்ந்து பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

Tags : festival ,Chariya Chari ,festivals ,
× RELATED மாமல்லபுரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்