×

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் வருஷாபிஷேக விழா

உடன்குடி.ஏப்.19: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழாவுக்கு பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 10மணிக்கு மேல் விமான அபிஷேகம், காலை 11மணிக்குள் சங்காபிஷேகம், கும்பாபிஷேகம், மதியம் 12மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், 12.30மணிக்கு அன்னதானமும், இரவு 8மணிக்கு அம்மன் திருத்தேர் பவனி வருதல் ஆகியவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருஷாபிஷேக விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கட்டளைதாரர்கள் சலவையாளர்கள், கால தசரா குழுவினர் செய்திருந்னர்.

Tags : Kulaseerppattinam Mutharaman Koil Adashashishakave Festival ,
× RELATED சாத்தான்குளம் ஏட்டு எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு