×

புதுக்கோட்டையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பலர் ஏமாற்றம்

புதுக்கோட்டை, ஏப்.19: புதுக்கோட்டையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். புதுக்கோட்டை காவல் நிலையம் அருகில் வசித்து வருபவர் சுப்பையா, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கான வாக்குச்சாவடி அருகில் உள்ளது. சுப்பையா வாக்குப்பதிவு செய்தார். அவரது மனைவிக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென கூறி வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இதனால் அவர் வாக்களிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இதுபோல் பலருக்கும் பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வாக்காளர் பட்டியலில் நிறைய குளறுபடிகள் உள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : Many ,Pudukkottai ,
× RELATED ஊராடங்கால் சிங்கப்பூரில் தமிழர்கள்...