×

அதிமுகவினர் பட்டுவாடா செய்வதாக கூறி அமமுகவினர் திடீர் போராட்டம்

மானாமதுரை, ஏப்.19:  தேர்தலன்றும் அதிமுகவினர் துணிகரமாக பணம் விநியோகித்ததாக கூறி அமமுகவினர் காந்திசிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டதால்  மானாமதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.மானாமதுரை தொகுதிக்கு இடைத்தேர்தல் நேற்று நடந்தது. காந்திசிலை அருகே அதிமுக நகரசெயலாளர் விஜிபோஸ் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் காலை 11 மணியளவில் வார்டு 3 முதல்ஐந்து வார்டுகளில் உள்ளவர்களுக்கு பணம் வழங்குவதற்காக காரில் பணம் கொண்டு வரப்பட்டதாக அமமுகவினருக்கு தகவல் கிடைத்தது. காந்திசிலை பஸ்ஸ்டாப் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரை திறக்க சொல்லி போலீசாரை டிடிவி அணியினர் வற்புறுத்தினர். போலீசார் வரும்போது அதிமுகவினருக்கும் டிடிவியினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் காரை திறந்து பார்த்துபோது காலி சூட்கேஸ் மட்டுமே இருந்தது. போலீசார் வரத்தாமதம் ஆனதால் பணம் இருந்த பெட்டி நகரசெயலாளர் விஜிபோஸ் வீட்டில் மறைத்துவைக்கப்பட்டதாக கூறி அமமுக நிர்வாகி குருமுருகானந்தம் தலைமையில் பலர் மாரியம்மன்கோயில் தெருவில் உள்ள அதிமுக நகர செயலாளர் வீட்டை முற்றுகையி முற்பட்டனர். அங்கு வந்த டிஎஸ்பி கார்த்திகேயன் அவர்களை சமரசம் செய்தார். இதே போல அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி எதிரிலும், பேரூராட்சி அலுவலகம் எதிரிலும், பழைய பஸ்ஸ்டாண்டு அருகேயும் சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டன. போலீசார் வரவழைக்கப்பட்டு சண்டையிட்டவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.இது குறித்து அமமுக நிர்வாகிகள் கூறுகையில், ஆளும்கட்சியினர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஓட்டுக்கு இரண்டாயிரம் வரை ெகாடுத்தனர். பல முறை தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.

Tags : struggle ,AIADMK ,
× RELATED நடிகை குஷ்புவை கண்டித்து 3-வது நாளாக பெண்கள் போராட்டம்..!!