அமோக வெற்றி பெறுவேன் நயினார் நாகேந்திரன் உறுதி

சாயல்குடி: ராமநாதபுரம் மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் நயினார்நாகேந்திரன் நேற்று கடலாடி, முதுகுளத்தூர் பகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள ஏஜென்ட்களிடம் வாக்கு பதிவு குறித்து கேட்டறிந்தார். முதுகுளத்தூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். எனக்கு மக்களின் எழுச்சியான நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் சுமார் 2 லட்சம் வாக்குகளுடன் அமோக வெற்றி பெறுவேன். குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும், மருத்துவ கல்லூரி மற்றும் நவோதிய பள்ளி துவங்கப்படும். மூக்கையூர் துறைமுகம் பணிகள், விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரபரணி ஆற்றை ராமநாதபுரம் ஆறுகளுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கண்மாய், கால்வாய்கள் தூர்வாரப்படும். ராமேஸ்வரத்திலிருந்து கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி வழியாக தூத்துக்குடிக்கு ரயில் போக்குவரத்து செய்து தரப்படும்’’ என்றார். பேட்டியின் போது ஒன்றிய செயலாளர்கள் தர்மர், முனியசாமி பாண்டியன், துணை செயலாளர் சண்முகபாண்டியன் உடனிருந்தனர்.

Related Stories:

>