×

சாத்தூரில் டாஸ்மாக் அருகே 920 பாட்டில்கள் பறிமுதல் பதுக்கி வைத்தவருக்கு வலை

சாத்தூர், ஏப். 18: சாத்தூரில் டாஸ்மாக் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 920 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தேர்தல் ஆணையம் உத்தரவின்படி கடந்த மூன்று நாட்களாக மது கடைகள் மூடபட்டுள்ளன. இந்நிலையில் நேற்று சாத்தூர் நகர காவல்நி–்லைய எஸ்.ஐ.முத்து முனியாண்டிக்கு சாத்தூர் டாஸ்மாக் அருகே மதுப்பாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். சாத்தூர் அண்ணாநகர் அரசு டாஸ்மாக் அருகே பெட்டிகளில் 920 பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்ிடிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மதுப்பாட்டில்கள் அனைத்தையும்  போலீசார் பறிமுதல் செய்தனர்.பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக சாத்தூர் டவுன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : hacker ,Tashmak ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு...