×

செம்பனார்கோவிலில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் மது விற்பனை படுஜோர்

செம்பனார்கோவில்,ஏப்.18:  மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் கடந்த 16ம்தேதி முதல் மூடப்பட்டன.குடித்துவிட்டு வன்முறையில் ஈடுபடுவதால் தேர்தலில் வாக்காளர்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கருதி மதுபானக்கடைகள் மூடப்படன. இதனால் கள்ளத்தனமாக மதுபானங்கள் பல்வேறு பகுதிகளில் படுஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சென்பனார்கோவில் பரசலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதுபான விற்பனை களைகட்டியுள்ளது. 110 ரூபாய்க்கு விற்கப்படும் குவாட்டர் மதுபாட்டில்கள் ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தேர்தலில் சட்ட ஓழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால் குறைவான காவலர்களே காவல் நிலையத்தில் உள்ளதால் இதில் கவனம் செலுத்தமுடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காவல்நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags : stores ,
× RELATED ஆந்திராவில் மதுபானக்கடைகளை மூட உத்தரவு..!!