×

கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் வெற்றிலைக்கு உரிய விலை கிடைக்கவில்லை விவசாயிகள் கவலை

கரூர்,ஏப்.18: கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் வெற்றிலைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர்.கரூர் மாவட்டம் கிருஷ்ணாயபுரம் வட்டாரத்தில் வெற்றிலை பயிர் சாகுபடி நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு வெற்றிலை அனுப்பப்படுகிறது. இளம்பயிர் வெற்றிலை ஒரு கவுளி ரூ.45 முதல் ரூ.50வரை விலைபோகிறது. மொத்த வியாபாரத்தில் 100கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.4500 முதல் ரூ.5000 வரை விற்பனையாகிறது. முதிர்கால் வெற்றிலை ரகம் ஒருகவுளி ரூ.35 முதல் ரூ.40 எனவும், ஒருசுமை ரூ.3500 முதல் ரூ.4ஆயிரம் வரையிலும் சராசரியாக விலை கிடைக்கிறது. விலை ஏற்ற இறக்கமாக இருப்பதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. கடும் வெயில் காரணமாக தண்ணீர் பாய்ச்ச அதிக செலவு ஏற்படுகிறது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வெற்றிலைக்கு சீரான விலை கிடைப்பதில்லை. சாகுபடி செலவு போக வெற்றிலையை கிள்ள கூலியாக ரூ500 கொடுக்கிறோம். ஆனால் சமயங்களில் ஒரு சுமையே ரூ.800க்குத்தான் விலைபோகும். ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து வெற்றிலை சாகுபடியில் இழப்புத்தான் ஏற்படுகிறது. தலைமுறைகளாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளதால் வேறு வழியின்றி ஈடுபட்டு வருகிறோம். தொடர்ந்து பாசன வாய்க்கால்களில் நீர் கிடைத்ததாலும், பனிப்பொழிவால் அதிக அளவு தளர்ச்சி இருந்ததாலும் உற்பத்தி அதிகரித்தது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால் கொடிக்காலுக்கு தினமும் தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே தண்ணீர் பிரச்னையால் இழப்பைத்தான் சந்திக்க வேண்டியதிருக்கிறது. கட்டுப்படியான விலைலயை அரசு நிர்ணயிக்க வேண்டும். நெல்கொள்முதல் செய்தைப்போல வெற்றிலையை கொள்முதல் செய்யவேண்டும் என்றனர்.


Tags : Krishnarayapuram ,region ,
× RELATED பட்டியில் அடைக்கப்பட்டுள்ள ஆடுகள்...