×

கும்பகோணத்தில் அதிமுக, அமமுகவினர் போட்டிபோட்டு பணபட்டுவாடா கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கும்பகோணம், ஏப்.18: கும்பகோணத்தில் அதிமுக, அமமுகவினர் போட்டுபோட்டு பணப்பட்டுவாடா செய்வதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மயிலாடுதுறை மக்களை தேர்தல் இன்று நடைபெறுவதை முன்னிட்டு திமுக சார்பில் ராமலிங்கமும், அதிமுக சார்பில் ஆசைமணியும் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதுார், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் உள்ளிட்ட 6 தொகுதிகளில் சுமார் 7,27,720  ஆண் வாக்காளர்களும், 7,39,040 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 50 வாக்காளர்களும் உள்ளனர்.

இத்தொகுதியில் சுமார் 28  ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவும் , திமுகவும் நேரிடையாக மோதுகிறது. இதனால் வெற்றி பெறுவதற்காக இரு கட்சியினருமே அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டனர். மேலும் அமமுகவும் போட்டியிடுவதால், அதிமுகவின் வாக்கு வங்கி சிதறி விடும் என்பதால் அதிமுகவினருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. எனவே அதிமுக வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்கு ரூ.250 ம், அமமுகவினர் ரூ.200 என வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றனர். கும்பகோணம் நகர ஒன்றிய பகுதிகளில் நேற்று பட்டபகலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதை தேர்தல் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என எதிர்கட்சியினர் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், அதிமுகவும், அமமுகவினரும் போட்டிபோட்டு கொண்டு பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர்.

எங்களுக்கு தகவல் வந்தும், மேலதிகாரிகள் கண்டுகொள்ளாமல் நமக்கு ஏன் வம்பு என்று இருந்து வருகிறார்கள். இதையே சாக்காக வைத்து இரு கட்சிகளும் பணம் பட்டுவாடா ,தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்து வருகிறார்கள். வாக்கினை விற்பனை செய்யக்கூடாது, விற்பனை செய்யமாட்டோம் என்று மத்திய, மாநில அரசுகள்,  பல்வேறு விழிப்புணர்வு  பிரசாரம் செய்து வந்தாலும், தமிழகத்தில் ஆளும் அதிமுக கட்சியினர் எந்த விதமான அச்சமின்றி பணம் பட்டுவாடா செய்து வருவது வேடிக்கையாக உள்ளது என்றார்.

Tags : AIADMK ,Kumbakonam ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...