×

கூத்தாநல்லூர், கமலாபுரம் அருகே பாலப்பணி நடைபெறும் இடத்தில் ஒளிரும் எச்சரிக்கை பலகை வைக்கப்படுமா ? வாகனஓட்டிகள் எதிர்பார்ப்பு

கூத்தாநல்லூர்,ஏப்18:  கூத்தாநல்லூர் திருவாரூர் நெடுஞ்சாலையில்கமலாபுரம் அருகேநெடுஞ்சாலைத்துறையினரால்மேற்கொள்ளப்படும் பாலப்பணிகள்நடை பெறும் இடங்களில் இரவுநேர ஒளிரும் புளோரசென்ட் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கமலாபுரம் அருகேஉள்ளமேலஅணக்குடிமற்றும் வெள்ளகுடி ஆகிய இடங்களில் பிரதானசாலையில்பாலம் சீரமைத்துபுதியபாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இரண்டு பாலப்பணிகளுமே வளைவான இடங்களில் ஆபத்தான வகையில் வாகனங்கள் கடக்கும் இடங்களில்அருகருகே நடைபெறுகின்றன. மேலும் நாள்ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்டஇருசக்கரமற்றும் நான்குசக்கரவாகனங்கள்பயணிக்கும்  இந்தசாலையில், சாலையின் ஒரு பகுதியைஅடைத்துமற்றொருபகுதியில்பணிகள்நடைபெறுகிறது. அந்தபகுதிவேலைமுடிந்ததும் அடுத்தபகுதி அடைக்கப்பட்டு பணிமுடிந்த பகுதி போக்குவரத்துக்குதிறக்கப்படும்.

இந்நிலையில்வேலைநடைபெறும் இடம் வளைவானபகுதி என்பதால் பாலவேலை நடைபெறும் இடத்தில்அடைக்கப்பட்டசாலை குறித்து இரவுநேரத்தில்வாகனஓட்டிகளின் கண்களில் படம் படியாக எந்தவித ஒளிரும் எச்சரிக்கையும் பலகையும் வைக்கப்படவில்லை. அதனால் புதிதாக இந்தசாலையில்வாகனம் ஓட்டி வருவோருக்கும் , வெளியூரிலிருந்துவாகனம் ஓட்டி வருவோருக்கும் விபத்து நடக்கும் வாய்ப்புஅதிகம் உள்ளது. எனவேஉடனடியாகநெடுஞ்சாலைத்துறையின் சார்பில்வேலைநடைபெறும் இரண்டு இடங்களிலும்  பக்கத்திற்கு ஒன்றாக நான்கு ஒளிரும் புளோரசென்ட் எச்சரிக்கை போர்டுகளை வைத்து, எச்சரிக்கையுடன் வாகனங்கள் செல்ல  நடவடிக்கை எடுக்க  வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : bridge ,Kamalapuram ,Kamalanallur ,
× RELATED பாம்பன் சாலை பாலத்தில் இணைப்பு ஸ்பிரிங் பிளேட்கள் சேதம்