×

திருத்துறைப்பூண்டி பள்ளிவாசலில் மீலாது விழா

திருத்துறைப்பூண்டி, ஏப்.18: திருத்துறைப்பூண்டி நாகை ரோடு, தைக்கால் தெரு ஜும்ஆ பள்ளிவாசல் மதரஸா உஸ்வதுல் ஹஸனாத் 12ம் ஆண்டு விழா மற்றும் மீலாது விழா திருத்துறைப்பூண்டி வேதை சாலையிலுள்ள மஹான் ஹக்கிம்ஷா ஒலியுல்லா பள்ளிவாசலில் நடைபெற்றது.
ஜமாத் தலைவர் முகமது யாசீன் தலைமை வகித்தார்.  மதரஸா மாணவர் ரியாஸ்கான் கிரா அத் ஓதி தொடங்கி வைத்தார். கட்டிமேடு இமாம் பெரிய பள்ளிவாசல் முகம்மது இஸ்மாயில் நடுவராக இருந்து மாணவ, மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் பேசினர். திருவாரூர் மாவட்ட ஜமா அத்துல் உலமாசபை பொருளாளர் அப்துர்ரஹ்மான் பேசினார்.

Tags : ceremony ,
× RELATED சீரடி சாய்பாபாவுக்கு திவ்ய விரத பூஜை செய்யும் முறை..!