×

தமிழக திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டு நிலுவையில் உள்ள 19 ஆயிரம் கோடியை உடனே வழங்க வேண்டும்: மத்திய நிதி அமைச்சர் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

சென்னை: மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழகத்துக்கு ஜிடிபியில் இருந்து 5 சதவீதம் கடனாக வழங்கப்பட்டால், கொரோனா தடுப்புகள், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள செலவினங்கள், முதலீட்டுப் பணிகளை சமாளிக்க முடியும். ஜிஎஸ்டி வரியை அமல்படுத்துவதன் மூலம் வருவாய் பெருக்க முடியும் என்பது பொய்த்துப் போனது போல உள்ளது. 14வது நிதி ஆணையம் பரிந்துரை செய்த செயல்பாட்டுக்கான நிதி கடந்த 3 ஆண்டுகளாக எந்த மாநிலத்துக்கும் வழங்கப்படவில்லை. கிருஷ்ணகிரி மதுரை, சிவகங்கை, பகுதிகளில் நீர்ப்பாசன திட்டங்களை நவீனப்படுத்த ரூ.730 கோடி தேவைப்படுகிறது. இதற்கான உரிய நிதியை வரும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டபணிக்கு மத்திய அரசின் பங்களிப்பை உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்துக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிதி, 13 மற்றும் 14 நிதி ஆணையத்தின் மூலம் ஊராட்சிகளுக்கான நிதி, சர்வ சிக்ஷா அபியான், ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்‌ஷா அபியான், கட்டாய கல்வி உரிமைச் சட்டம், வெள்ள மேலாண்டும் திட்டம், உயர்கல்வி உதவித் தொகை திட்டம் ஆகியவற்றுக்காக வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 19 ஆயிரத்து 591 கோடியே 63 லட்சம் நிதியை உடனே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகத்தில் பாதுகாப்பு துறை தொழில் காரிடாரில் உரிய கட்டமைப்புகள், பொது வசதிகள் செய்து மேம்படுத்த மத்திய அரசு ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். சென்னை-தூத்துக்குடியை இணைக்கும் வகையில் ஒரு அதிவேக பயணிகள் மற்றும் சரக்கு ரயில் காரிடார் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார். ஜிஎஸ்டி விரியை அமல்படுத்துவதன் மூலம் வருவாய் பெருக்க முடியும் என்பது பொய்த்துப் போனது போல உள்ளது, இருப்பினும் இதற்கான காரணங்கள் தீவிரமாக ஆராயப்படுகிறது….

The post தமிழக திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டு நிலுவையில் உள்ள 19 ஆயிரம் கோடியை உடனே வழங்க வேண்டும்: மத்திய நிதி அமைச்சர் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Finance ,Chennai ,Deputy ,Chief Minister ,O.M. ,Panneerselvam ,Union Minister of Finance ,
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...