மண்ணச்சநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி தந்தை கண்முன்னே நடந்த சோகம்

மண்ணச்சநல்லூர், ஏப்.18:  மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மேவாளாடி பெரியார் தெருவை சேர்ந்தவர் ரெங்கதுரை (39). கூலி தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி(32). இவர்களது மகன் கணீஷ் (14). 9ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் விடுமுறை என்பதால் நேற்று கணீஷ் தனது தந்தை வேலை செய்யும் கட்டிடத்திற்கு சென்று, அங்கு தந்தைக்கு உதவியாக சிமெண்ட் கலவை இரும்பு சட்டியை எடுத்துக் கொடுத்து உதவி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிமெண்ட் கலவை இரும்பு சட்டி அருகே சென்ற மின்கம்பியில் உரசியதில் கணீசை மின்சாரம் தாக்கியது. அப்போது தந்தை கண்முன்னே மாணவர் கணீஷ் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணீஷ் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

Related Stories:

>