×

துறையூர் அருகே உலா வரும் 3 கரடிகளால் பொதுமக்கள் பீதிவனத்துறையினர்

அலட்சியம்துறையூர், ஏப்.18: துறையூர் அருகே பாலகிருஷ்ணம்பட்டியில் உலா வரும் 3 கரடிகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தகவலறிந்தும் நடவடிக்கை எடுக்காமல் எல்லையை காரணமாக கூறி வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  துறையூரை அடுத்த உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது பாலகிருஷ்ணம்பட்டி. இங்கு அய்யாற்று கரை அருகே உள்ள விவசாயி செழியன் என்பவர் தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதை கண்ட விவசாயி, பெரிய காலடி தடங்கள் இருப்பதைக்கண்டு அந்த கால் தடங்கள் வழியே நடந்து சென்றார். அந்த கால் தடங்கள அய்யாறுக்கு சென்றபோது ஆற்றிற்குள் சுமார் 3 அடி உயரத்தில் 2 கரடிகளும், ஒரு குட்டி கரடியும் இருந்துள்ளது இதை கண்ட செழியன் அதிர்ச்சியடைந்தார். அந்த கரடிகளை பார்த்ததும் செழியன் அங்கிருந்து தப்பித்து ஊருக்குள் வந்து தகவலை தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் ஆற்றோரம் உள்ள  வயலில் வேலை செய்த பெண்களை அங்கு இருந்து வெளியே வர செய்தனர். பின்பு ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து கரடியை அந்த பகுதியில் இருந்து துரத்தியுள்ளனர்.

தகவலறிந்த வன அலுவலர் குணசேகரன் தலைமையில் அங்கு சென்ற வனத்துறையினர் இந்த பகுதிய எங்கள் கட்டுப்படாட்டில் இல்லை. சேலம் பகுதியியை சேர்ந்தது என்று மீண்டும் திருப்பி வந்து விட்டார்கள். இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், பொதுமக்களை வன விளங்குகளில் இருந்து காக்க வேண்டி வனத்துறையினர் எல்லை பற்றி கூறி விட்டு சென்றது முறையானது இல்லை என்று தெரிவித்தனர். கரடிக்கு மலை பகுதியில் வனத்துறையினர் தண்ணீர் தொட்டி அமைப்பது இல்லை. அதனால் வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் தண்ணீரை தேடி, இரவிலும் பகலிலும் ஊர்களிலும். வயல்வெளி மற்றும் ஐயாற்று ஓடை ஆகிய இடங்களில் சுற்றித்திரிந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கூண்டு வைத்து கரடிகளை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் தொட்டியை வனத்துறையினர் வைக்க வேண்டும். அதற்காக அரசு கொடுக்கும் சலுகைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thuraiyur ,
× RELATED துறையூர் அருகே கார், ஆட்டோ மோதல் முதியவர் பரிதாப பலி