×

சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளா? பெற்றோரே கண்டறிய உத்தரவு

நாகர்கோவில், ஏப்.18:  குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற இதர வாரியப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகள் அங்கீகாரம் பெற்ற விவரத்தை பள்ளி அறிவிப்பு பலகையில் பெற்றோர் அறியும் வண்ணம் அங்கீகார ஆணை எண், நாள், அங்கீகாரம் வழங்கப்பட்ட காலம் ஆகியவற்றை குறிப்பிட்டு வைக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும், கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக பள்ளிக் கல்வித் துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளை சிபிஎஸ்இ பாட திட்டம் மற்றும் மெட்ரிக் தனியார் பள்ளிகளில் சேர்க்கை செய்யும் முன், அப்பள்ளி அரசின் அங்கீகாரம் பெற்று செயல்படுகிறா? என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : CBSE ,schools ,Parents ,
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...