×

சேலம் மத்திய சிறையில் இருக்கும் குண்டாஸ் கைதிகள் ஓட்டுப்போட மறுப்பு

சேலம், ஏப்.18: சேலம் மத்திய சிறையில் இருக்கும் குண்டாஸ் கைதிகள் ஓட்டுப்போட மறுத்து விட்டனர். அதே போல தமிழகம் முழுவதும் பெரும்பாலான கைதிகள் ஓட்டுப் போட ஆர்வம் இல்லை என  தெரிவித்து விட்டனர். தமிழக மத்திய சிறைகளில் இருக்கும் குண்டாஸ் கைதிகளுக்கு மட்டும் வாக்களிக்க அனுமதி உண்டு. விசாரணை கைதிகளுக்கு கிடையாது. அதன்படி இன்று நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுபோட குண்டாஸ் கைதிகள் கணக்கெடுக்கப்பட்டனர். சென்னை புழல், கோவை, மதுரை, சேலம், வேலூர், பாளையங்கோட்டை, கடலூர் உள்பட 9 மத்திய சிறைகளில் 862 கைதிகள் இருப்பது  தெரியவந்தது. தேர்தலில் வாக்களிக்க விருப்பமா? என சிறை அதிகாரிகள் அவர்களிடம் கேட்டனர்.

ஆனால், பெரும்பாலான கைதிகள் விருப்பம் இல்லை என தெரிவித்து விட்டனர். 590 குண்டாஸ் கைதிகள் வேண்டாம் என கூறி விட்டனர். சேலம் மத்திய சிறையில் இருக்கும் 15 குண்டாஸ் கைதிகளும், ஓட்டு போட மறுத்ததுடன் எழுதியும் கொடுத்து விட்டனர். விருப்பம் தெரிவித்த 272 கைதிகளுக்கு மட்டும், தபால் ஓட்டுகளை வழங்க அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இன்று அவர்கள் தபால் வாக்களிப்பார்கள். இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘வழக்கமாக குண்டாஸ் கைதிகள் ஓட்டுப்போட ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், இம்முறை ஓட்டுப்போடபோவதில்லை பெரும்பாலான கைதிகள் கூறி விட்டனர்,’ என்றனர்.

Tags : prisoners ,Kuntas ,Salem Central Jail ,
× RELATED 221 கைதிகளுக்கு மதிப்பீட்டு தேர்வு