×

கெங்கவல்லியில் டீ குடிக்க வந்தவரிடம் டூவீலர் திருட்டு 5 மணி நேரத்தில் வாலிபர் சிக்கினார்


கெங்கவல்லி, ஏப்.18: கெங்கவல்லியில், டீ குடிக்க வந்தவரிடம் டூவீலர் திருடிய வாலிபரை 5 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். கெங்கவல்லி அருகே கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். கேரளாவில் பணியாற்றி வரும் இவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை அதே ஊரைச் சேரந்த உறவினரான திருப்பதி(39) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை அந்த வாகனத்தில் கடம்பூர் பஸ் ஸ்டாப் பகுதிக்கு டீ குடிப்பதற்காக வந்துள்ளார். வண்டியை நிறுத்தி விட்டு கடைக்கு சென்று டீ குடித்துள்ளார். பின்னர், திரும்பி வந்து பார்த்தபோது வண்டி காணாததை கண்டு திடுக்கிட்டார். அக்கம், பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். மேலும், வாகன தணிக்கையை முடுக்கி விட்டனர். அப்போது, காலை 10 மணியளவில் டூவீலரில் சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் ஓட்டி வந்த வாகனம் கடம்பூர் பஸ் ஸ்டாப்பில் திருப்பதியிடம் திருடியது என்பது தெரிய வந்தது. உடனே, வண்டியை ஓட்டி வந்த அதே பகுதியைச் சேர்ந்த வையாபுரி மகன் மணி(25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து டூவீலர் கைப்பற்றப்பட்டது. பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : teenager ,robbers ,
× RELATED பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது