நாமக்கல் அருகே பறக்கும்படை சோதனையில் ₹2.69 லட்சம் பறிமுதல்

நாமக்கல், ஏப்.18: நாமக்கல் அருகே, பறக்கும்படை சோதனையில், உரிய ஆவணமின்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ₹2.69 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, வளையப்பட்டி-காட்டுபுத்தூர் சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மோகனூரை சேர்ந்த சுரேந்திரன் என்பவரிடம், ₹2.69 லட்சம் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால்,  பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

× RELATED நாமக்கல் அருகே அதிக பாரம் ஏற்றிய 2 லாரிகள் பறிமுதல்