×

கொல்லிமலையில் தோட்டக்கலை துறை சார்பில் சாக்லெட் தயாரிக்க பயிற்சி

நாமக்கல், ஏப்.18: நாமக்கல் தோட்டக்கலை துறை சார்பில், சாக்லெட் தயாரித்தல், மாடித்தோட்டம் அமைப்பது குறித்த 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. தோட்டக்கலை பயிர் சாகுபடி முறைகளில் உள்ள சமீபத்திய தொழில்நுட்பங்களை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொல்லிமலையில் உள்ள செம்மேடு மற்றும் படசோலை அரசு தோட்டக்கலை பண்ணைகளில், தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பது, வீட்டுக் காய்கறி தோட்டம் அமைத்தல், காளான் வளர்ப்பு, மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் சாக்லெட் தயாரித்தல் போன்ற பயிற்சி பெற 3 நாட்கள் கோடை பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.

பயிற்சி முகாம் ஏப்ரல் 20 முதல் மே 31 வரை, அரசு விடுமுறை நாட்கள் தவிர, மற்ற நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சியை 3 நாட்கள் இடைவெளி இல்லாமல் பயிற்சியாளர்களே தேர்ந்தெடுத்து, பயிற்சி கட்டணமாக நாளொன்றுக்கு ₹100 வீதம் செலுத்தி பயிற்சி பெறலாம். பயிற்சியின் போது கையேடு, குறிப்பேடு மற்றும் பேனா வழங்கப்படும். பயிற்சி முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் நடவு செடிகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு கொல்லிமலை தோட்டக்கலை உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Horticulture Department ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா...