×

ஓசூரில் பரபரப்பு முன்னாள் கவுன்சிலர் வீட்டில் ஐடி திடீர் ரெய்டு

ஓசூர், ஏப்.18: ஓசூரில் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் வீட்டில், நேற்றிரவு வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் ஏதும் சிக்கவில்லை. ஓசூர் முனீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் முன்னாள்  நகராட்சி கவுன்சிலர் இளையபெருமாள். நகராட்சியில் சிறு சிறு திட்டப்பணிகளை கான்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார். இவர் சுயேட்சையாக போட்டியிட்டு நகராட்சி கவுன்சிலர் ஆனவர். இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில், ஓசூர் வருமான வரித்துறையினர், திடீரென இளையபெருமாள் வீட்டுக்கு வந்து சோதனையிட்டனர். சுமார் அரைமணி நேர சோதனையில், அவரது வீட்டில் பணமோ, ஆவணங்களோ கிடைக்கவில்லை. இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள், பக்கத்தில் உள்ள இளைய பெருமாளின் அண்ணன்  பூபதி வீட்டிற்கு சென்ற சோதனையிட்டனர்.

இவர் பெங்களூரு பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து இளையபெருமாள் கூறுகையில், ‘ஆளும்கட்சியினர் அராஜகமே இந்த சோதனைக்கு காரணம்.  சுயேட்சை கவுன்சிலரான நான், திமுக அனுதாபியாக இருந்தேன். எங்களை போன்ற சிறு,சிறு கான்ட்ராக்டர்களை ஒடுக்கத்தான், இதுபோன்ற சோதனைகளில் அதிமுக அரசு ஈடுபட்டு வருகிறது. உயர் அதிகாரிகள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களின் வீடுகளில் சோதனையிடாமல், எங்களின் வீடுகளில் சோதனை செய்கின்றனர்,’ என்றார்.

Tags : raid ,councilor ,home ,Hosur ,
× RELATED ரெய்டு நடத்தி ‘பே பிஎம்’ வசூல்...