பைக் மீது கார் மோதி இளம்பெண் சாவு: கணவன் படுகாயம்

சென்னை, ஏப்.18: காளஹஸ்தி கோயிலுக்கு சென்று திரும்பியபோது பைக் மீது கார் மோதி சென்னையை சேர்ந்த இளம்பெண் பரிதாபமாக பலியானார். மேலும் அவரது கணவர் படுகாயமடைந்தார். கும்மிடிபூண்டி தாலுகா, ஆரம்பாக்கம் அருகில் உள்ள பூலா கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(32). இவரது மனைவி ரேணுகா(28). கணவன், மனைவி இருவரும் காளஹஸ்தி சிவன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்றுமுன்தினம் சொந்த ஊருக்கு பைக்கில் திரும்பினர். வரதய்யபாளையம் மண்டலம், பத்தல வல்லம் அடுத்த யனமலகுன்டா அருகில்  தடாவில் இருந்து வரதய்யபாளையம் சென்றுகொண்டிருந்த கார் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ரேணுகா, பெருமாள் ஆகியோர் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்
தனர்.

தகவலறிந்து வரதய்யபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு, சிட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரேணுகா பரிதாபமாக இறந்தார். மேலும்,  பெருமாள் மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து வரதய்யபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிபிரசாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Car crash ,
× RELATED பைக் மோதி படுகாயமடைந்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி