×

கும்மிடிப்பூண்டி அருகே 1400 மதுபாட்டில்கள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி, ஏப். 18: கும்மிடிப்பூண்டி அருகே நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஆந்திராவில் இருந்து  கடத்தி வரப்பட்ட ஆயிரத்து, 400 மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டியை அடுத்த தமிழக ஆந்திர எல்லையான கண்ணம்பாக்கம் பகுதியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு மதுபாட்டில் சப்ளை செய்யவதற்காக, கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில், மதுவிலக்கு போலீசார் விரைந்து வந்து  சத்தியவேடு-கவரப்பேட்டை, மற்றும் நாயுடு குப்பத்திலிருந்து பல்லவாடா செல்லும்  சாலைகளில் வரும் வாகனங்களை மடக்கி  சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஷேர் ஆட்டோவில் சுமார் ஆயிரத்து, 400  மதுபாட்டில்கள் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டது என தெரியவந்தது.
இது சம்பந்தமாக, ஆட்டோ டிரைவர் பரமேஸ்வரன்  (38), அவருடன் வந்த மேலூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் (40) ஆகியோர் மீது மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, இந்த மதுபாட்டிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய கடத்தி வரப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : liquor shops ,gummidipoondi ,
× RELATED கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ விஜயகுமாருக்கு கொரோனா