×

மண்டபம் பகுதி ஆழம் குறைந்ததால் படகுகளை நங்கூரமிட்டு நிறுத்த முடியவில்லை துறைமுகம் அமைக்க மீனவர்கள் வலியுறுத்தல்

மண்டபம், ஏப்.18: மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் சேதமடைந்துள்ள துறைமுகத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டபம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மண்டபம் பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 300க்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது விசைப்படகுகளுக்கு தடை காலம் உள்ள நிலையில், நாட்டுப்படகுகள் மட்டும் மீன்பிடித்து வருகிறது. இதில் மண்டபம் வடக்கு கடல் பகுதியான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டு படகு மீனவர்களின் தேவைக்காக மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் பல லட்சம் செலவில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது.இந்த மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்கள் வலைகளை படகுகளில் ஏற்றவும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் போது மீன்பிடி உபகரணங்கள் ஏற்றி செல்லவும், கடலுக்கு சென்று மீன்பிடித்து வரும் மீன்களை இறக்கவும் உதவியாக இருந்து வருகிறது. மேலும் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு மற்றும் தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான ரோந்து படகுகள் மற்றும் கப்பல்கள் நிறுத்தி வைக்கவும் உதவியாக இருந்து வருகிறது.இந்நிலையில் தற்போது மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மீன்பிடி துறைமுகம் சேதமடைந்து அடிப்படை வசதிகள் இல்லாமல் பொலிவிழந்து காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் மின்விளக்கு எரியாததால் இரவில் மர்ம நபர்கள் மது குடிக்கும் பாராக பயன்படுத்தி வருகின்றனர். துறைமுகம் பகுதி ஆழம் குறைந்து காணப்படுவதால், இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் மற்றும் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை நங்கூரமிட்டு நிறுத்த முடியாமல் அவதிக்குள்ளாகின்
றனர்.இதனால் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள துறைமுகத்தை சீர் செய்து கடலை ஆழப்படுத்தி படகுகள் மற்றும் ரோந்து கப்பல்கள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டபம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மீனவர் முரளி கூறும்போது, ‘மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் சேதமடைந்து காணப்படும் மீன்பிடி துறைமும் சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது உள்ள மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து படகுகளும் நிறுத்தி வைக்க போதுமானதாக இல்லை. இதனால் மண்டபம் பகுதி மீனவர்கள் புயல் மற்றும் மழைகாலங்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க முடியாத நிலையுள்ளது. மேலும் துறைமுகத்தில் மின்விளக்குள் எரியாததால் இரவில் திருட்டு அதிகளவில் நடந்து வருகிறது. இதனால் விரைவில் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் அனைத்து படகுகள் நிறுத்தி வைக்கும் அளவிற்கு துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ தெரிவித்தனர்.

Tags : harbor ,hall ,
× RELATED அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை...