×

அதிமுக எம்எல்ஏ வீட்டில் சோதனை?

மதுரை, ஏப். 18:மதுரை தெற்குத் தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணன். இவரது வீடு காமராஜர் சாலையில் அரசமரம் பிள்ளையார் கோயில் அருகே உள்ளது. இங்கு வருமான வரித்துைற, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழு நேற்று இரவு திடீர் சோதனை நடத்தியதாகவும், இதில் பணம் உள்ளிட்ட எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. அந்த சமயத்தில் எம்எல்ஏ வீட்டில் இல்லை என்றும், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரது வீட்டிற்கு அருகே, குமார் என்கிற கவுன்சிலர் வீட்டிலும் சோதனை நடந்ததாகவும், அஙகிருந்தும் எதையும் கைப்பற்றவில்லை என கூறுப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : AIADMK ,home ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...